‘எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல’.. 3ம் வகுப்பு மாணவியின் கடிதமும், முதல்வரின் அறிவிப்பும்!

‘எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல’.. 3ம் வகுப்பு மாணவியின் கடிதமும், முதல்வரின் அறிவிப்பும்!

‘எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல’.. 3ம் வகுப்பு மாணவியின் கடிதமும், முதல்வரின் அறிவிப்பும்!
Published on

பள்ளிக் கட்டிட நிலையை சுட்டிக்காட்டி முதல்வருக்கு கடிதம் எழுதிய 3- ம் வகுப்பு மாணவியின், பெயரையும் ஊரையும் கூறி, மாணவி கடிதத்தின் பேரில் வகுப்பறைகள் கட்ட, நலத்திட்ட மேடையிலேயே முதல்வர் நிதி ஒதுக்கினார்.

தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி வினைதீர்த்த நாடார் பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 -ம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற மாணவி சில தினங்களுக்கு முன்னர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “நான் பயிலும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள கட்டிடத்தில் இடவடதி இல்லை, விளையாட்டுத் திடல் இல்லாததால் தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பில்லை, எனவே என் அப்பா என்னை வேறு ஊரில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்போவதாக கூறியுள்ளார். ஆனால் எனக்கு எங்க ஊரில் உள்ள பள்ளியிலேயே படிக்க வேண்டும் என ஆசை. எனவே பள்ளியின் கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும்” எனக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

இன்று நலத்திட்டம் வழங்க தென்காசி மாவட்டத்திற்கு வந்த முதல்வர், அந்த சிறுமியின் பெயரை குறிப்பிட்டு கூறி, “இந்த சிறிய வயதில் சிறுமி எழுதிய அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்கு பெருமையாக இருந்தது. எவ்வளவு நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால், அவர் இப்படி எனக்கு கடிதம் எழுதியிருப்பார். அந்த குழந்தை ஆரதனா கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன்” எனக் கூறி முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 பள்ளிக் கட்டிடம் கட்டித்தர முதல்வர் அறிவித்தார். மேலும் அதை மகிழ்வுடன் அறிப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com