கோயில் திருவிழா நடத்துவதில் கைகலப்பு - அமமுக பிரமுகருக்கு கத்திக்குத்து

கோயில் திருவிழா நடத்துவதில் கைகலப்பு - அமமுக பிரமுகருக்கு கத்திக்குத்து

கோயில் திருவிழா நடத்துவதில் கைகலப்பு - அமமுக பிரமுகருக்கு கத்திக்குத்து
Published on

மேலூர் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், அமமுக பிரமுகர் உட்பட இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒரு தரப்பினர், திருவிழா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது முடிந்த பிறகு விழா நடத்தலாம் எனக் கூறியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இதுதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருதரப்பினர் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜூ உள்ளிட்டோரை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து ராஜூவின் மகன் தமிழ்வாணன், தாக்கிய மற்றொரு தரப்பைச் சேர்ந்த அமமுக பிரமுகர் பரதன், மற்றும் முத்துக்குமாரசாமி உள்ளிட்டோரை கத்தியால் இடுப்பு, கழுத்து, மற்றும் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார், இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மேலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் பரதன் தரப்பு தாக்கியதாக ராஜூ, இளங்கோவன் உள்ளிட்ட 3 பேரும் சிசிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கத்திக்குத்துக்கு ஆளான பரதன், முத்துகுமாரசாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலூர், மற்றும் மேலவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com