தருமபுரி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு
தருமபுரி அருகே இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அமைதியை நிலைநாட்டும் வகையில் காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் இருவேறு சமூக மக்கள் வசிக்கும் கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. இதில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் பிரியாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு பிரியா வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரிக்கு சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. எனவே பிரியாவை அவர் காதலித்தவர்தான் கடத்தி சென்றதாக கருதி இரு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.