சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் மீது செயலாளர் புகார்... போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?

பாஜக மாவட்ட செயலாளர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள தலைவரை தேடி வருகின்றனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை கிழக்கு மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளவர் பாலசுப்ரமணியம் (63). இவர், நேற்று பாஜக சார்பில் வேளச்சேரியில் உள்ள தனியார் இடத்தில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Complaint copy
Complaint copypt desk

இதனால் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யனுக்கும், பாலசுப்ரமணியனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட தலைவர் சாய் சத்யன் கொலை மிரட்டல் விடுத்து, மூஞ்சியை உடைத்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியம் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Accused
தீ பறக்க பேசிய ராகுல்... சைலெண்டாக எழுந்த பிரதமர்.. சபாநாயகரின் அந்த ரியாக்ஷன்!

புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் 294 (b), 352, 506 (1), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சாய் சத்யனை தேடி அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com