பசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை!

பசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை!

பசுவின் கன்றுகளை கொண்டு சென்ற விவசாயி: இந்து அமைப்புகளால் வன்முறை!
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விவசாயத்திற்காக கன்றுகளை பொள்ளாச்சிக்கு கொண்டு சென்ற விவசாயியை இந்து அமைப்புகள் தடுத்ததால் இருபிரிவினரிடையே வன்முறை ஏற்பட்டது. வன்முறையை அடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

விவசாயி ஒருவர் 7 பசு கன்றுகளை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சிக்கு கொண்டுச் சென்றார். அப்போது பழனியில் அவரை வழிமறித்த ஜீயர் ஒருவரின் ஆதரவளர்கள் கன்றுகளை இறைச்சிக்காக கொண்டுசெல்வதாகக் கூறி பசுகன்றுகளை வண்டியோடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கன்றுகளை விவசாயத்திற்காகவே கொண்டுசெல்வதாக வாதிட்டு வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக முற்றியது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த அரசு பேருந்து ஒன்று சேதமடைந்தது. நிலைமை சீரடையாததால காவல்துறையினர் தடியடி நடத்தி இருபிரிவினரையும் கலைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com