குடும்ப அட்டையில் திருத்தங்கள் - சிறப்பு முகாம்

குடும்ப அட்டையில் திருத்தங்கள் - சிறப்பு முகாம்

குடும்ப அட்டையில் திருத்தங்கள் - சிறப்பு முகாம்
Published on


சென்னை‌ முழு‌வதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல்  மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் குறைதீர் கூட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண அந்தந்த மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திலேயே குறைதீர் கூட்ட முகாம்கள் இன்று நடைபெற உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், கைப்பேசி எண் திருத்தம், நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது பற்றியும் குறைகள் ஏதும் இருந்தால் நுகர்வோர் அவற்றைத் தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com