“விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” - ஸ்டாலின்

“விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” - ஸ்டாலின்

“விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி” - ஸ்டாலின்
Published on

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றது பேரணி இல்லை, போர் அணி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற பேரணி நிறைவு பெற்றுள்ளது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணி புதுப்பேட்டை வழியாக சென்று ராஜரத்தினம் மைதானத்தில் முடிவு பெற்றது. இந்த பேரணியில் திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம், வீரமணி, திருமாவளவன், வைகோ, முத்தரசன், கே.எஸ்.அழகிரி, ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் மத ரீதியாக மக்களை பிரிக்க வேண்டாம் எனவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காலை 10 மணிக்கு தொடங்கிய பேரணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. பேரணியின் நிறைவில் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியின் நிறைவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இது பேரணி இல்லை, போர் அணி என்று தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் எனவும் திமுக கூட்டணி போராட்டத்தின் விளம்பரத்திற்கு துணை நின்ற அதிமுக, பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com