தமிழ்நாடு
கனிமொழி புகார்: சென்னை ஏர்போர்ட்டில் அதிகளவில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்கும் சிஐஎஸ்எப்?
கனிமொழி புகார்: சென்னை ஏர்போர்ட்டில் அதிகளவில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்கும் சிஐஎஸ்எப்?
கனிமொழி எழுப்பிய இந்தி விவகாரம் காரணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகளவில் தமிழ்தெரிந்த பணியாளர்களை பணியமர்த்த சிஐஎஸ்எப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலைய சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் தன்னிடம் “இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா” என்று கேள்வியெழுப்பினார் என கனிமொழி எம்.பி கூறிய புகார் விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதனையடுத்து கனிமொழிக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பணியாளர்களை அதிகளவில் பணியில் ஈடுபடுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை( சிஐஎஸ்எப்) நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.