உயர்த்தப்பட்ட திரையரங்கு கட்டணம்: அரசாணை வெளியீடு

உயர்த்தப்பட்ட திரையரங்கு கட்டணம்: அரசாணை வெளியீடு

உயர்த்தப்பட்ட திரையரங்கு கட்டணம்: அரசாணை வெளியீடு
Published on


தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட் கட்டணங்கள் தொ‌டர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் திரையரங்குகள் வாரியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்சமாக 50 ரூபாயும், அதிகபட்சமாக கட்டணமாக 150 ரூபாயும் வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்குகளில் அதிகபட்சமாக 100 ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளில் 80 ரூபாய் கட்டணமாக வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளிலுள்ள திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய், அதிகபட்சமாக 62.50 ரூபாய் வசூலிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிக்குட்பட்ட திரையரங்குகளில் அதிகபட்சமாக 50 ரூபாயும், டவுன் பஞ்சாயத்து திரையரங்குளில் 31 ரூபாயும், கிராம பஞ்சாயத்து திரையங்குகளில் அதிகபட்சமாக 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com