’சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இல்லை’: ரஜினி புகழாரம்

’சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இல்லை’: ரஜினி புகழாரம்

’சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இல்லை’: ரஜினி புகழாரம்
Published on

மறைந்த துக்ளக் ஆசிரியர் சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இல்லை என நடிகர் ரஜினி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னையில் துக்ளக் இதழில் 47ஆவது ஆண்டுவிழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ரஜினி சோவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அசாதாரண திறமைகளைக் கொண்ட சோ ராமசாமி, உண்மையாகவும், சுயநலமின்றியும் வாழ்ந்தவர். மொராஜி தேசாய் முதல் மோடி வரை சோவுக்கு நல்ல நண்பர்கள். அவர் இல்லாத விழாவில் பேசுவது வருத்தமளிக்கிறது. அவரிடம் ஆலோசனை கேட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் அவரிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இல்லை என்று ரஜினி பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com