\
சோ ராமசாமிக்கு பத்மபூஷன்; யேசுதாசுக்கு பத்மவிபூஷண்

சோ ராமசாமிக்கு பத்மபூஷன்; யேசுதாசுக்கு பத்மவிபூஷண்

சோ ராமசாமிக்கு பத்மபூஷன்; யேசுதாசுக்கு பத்மவிபூஷண்
Published on: 

மறைந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமிக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி, புகழ் பெற்ற இசைக்கலைஞர் விஸ்வ மோகன் பத் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல பத்மவிபூஷண் விருதுகள் பெருபவர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண் விருது பெறுபவர்கள்:

முரளி மனோகர் ஜோஷி (பாஜக மூத்த தலைவர்)

சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்)

பி.ஏ.சங்மா (மக்களவை முன்னாள் சபாநாயகர்)

ஜக்கி வாசுதேவ் (ஈஷா யோக மைய நிறுவனர்)

கே.ஜே.யேசுதாஸ் (பின்னணி பாடகர்)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com