’சின்னசேலம் பள்ளி மாணவி மரணத்தில் நடந்தது என்ன?’ - விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

’சின்னசேலம் பள்ளி மாணவி மரணத்தில் நடந்தது என்ன?’ - விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
’சின்னசேலம் பள்ளி மாணவி மரணத்தில் நடந்தது என்ன?’ - விசாரணைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி கடந்த 13ஆம் தேதி மரணமடைந்தார். விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து மாணவி இறந்தார் என பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது. ஆனால் மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில் என்ன நடந்தது என விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவி மரணம் நடந்த பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவியின் உடலை தாங்கள் கூறும் மருத்துவரை கொண்டு மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com