\
டாப்ஸிலிப் பயிற்சிக் கூண்டில் ’சின்னதம்பி’!

டாப்ஸிலிப் பயிற்சிக் கூண்டில் ’சின்னதம்பி’!

டாப்ஸிலிப் பயிற்சிக் கூண்டில் ’சின்னதம்பி’!
Published on: 

உடுமலை கண்ணாடிப்புத்தூரில் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, டாப்ஸ்லிப் வரகளியாறு பயிற்சிக் கூண்டில் அடைக்கப்பட்டது.

கோவை தடாகம் பகுதியில் கடந்த மாதம் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானை, சின்னதம்பியை வனத்துறையினர் பிடித்து டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர்.

ஆனால், அங்கிருந்து தப்பிய அந்த சின்ன தம்பி, உடுமலை கண்ணாடிப்புத்தூரில் உள்ள விளைநிலங்களைச் சேதப்படுத்தத் துவங்கியது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் வனத்துறையினர் சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். பின்னர், டாப்ஸ்லிப் வரகளியாறு பிகுதியில் உள்ள பயிற்சி முகாமில் உள்ள (கிரால்) கூண்டில் இன்று அதிகாலை அடைத்தனர். 

வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சின்னதம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com