முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சீன தூதர் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவுக்கான சீன தூதர் லோ சாஓஹுய். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்ற அவர், மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் சுமார் 15 நிமிடங்கள் அங்கிருந்தார். இந்தியாவிற்கான சீனத்தூதர் மெரினாவில் ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தது போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிமுக தொண்டர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

