கயிலாய யாத்திரைமுகநூல்
தமிழ்நாடு
கயிலாய யாத்திரை| 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா அனுமதி!
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரியும் சீன வெளியுறவுத்துறை செயலாளர் சன் வெய்டாங்கும் பெய்ஜிங்கில் சந்தித்தனர்.
இந்தியாவிலிருந்து கயிலாய யாத்திரை வருபவர்களை மீண்டும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்திரியும் சீன வெளியுறவுத்துறை செயலாளர் சன் வெய்டாங்கும் பெய்ஜிங்கில் சந்தித்தனர். அப்போது கயிலாய யாத்திரைக்கு இந்தியர்களை இந்தாண்டு முதல் மீண்டும் அனுமதிக்க சீனா ஒப்புதல் தெரிவித்தது.
இந்துக்களின் மிக முக்கிய வழிபாட்டுத்தலங்களில் ஒன்றான கயிலாய மலை சீனாவில் உள்ள நிலையில் அங்கு இந்தியர்கள் செல்ல கடந்த 5 ஆண்டுகளாக தடை இருந்த நிலையில் தற்பாது அது மீண்டும் தொடங்கப்பட உள்ளது. நதி நீர் பிரச்சினைகளில் தீர்வு காண்பது, நேரடி விமான சேவை தொடக்கம் உள்ளிட்டவற்றுக்கும் கொள்கை அளவில் ஒப்புதல் தரப்பட்டது