\
ராமநாதபுரம்: கின்னஸ் சாதனை முயற்சி.. கண்களை கட்டியபடி சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்

ராமநாதபுரம்: கின்னஸ் சாதனை முயற்சி.. கண்களை கட்டியபடி சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்

ராமநாதபுரம்: கின்னஸ் சாதனை முயற்சி.. கண்களை கட்டியபடி சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்
Published on

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக கண்களை கட்டிக்கொண்டு சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர்.

சாயல்குடியை சேர்ந்த சிலம்பக் கலை பயிற்றுநர் அம்சவர்தன், சிலம்ப கலையில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக பயிற்சி அளித்த சிறுவர், சிறுமிகளை தயார்படுத்திய அம்சவர்தன், அவர்களது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி சிலம்பம் சுற்ற வைத்துள்ளார்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவெளி இல்லாமல் சிலம்பம் சுற்றிய சிறுவர், சிறுமிகளை அங்கிருந்தவர்கள் வெகுவாக பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com