\
குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்

குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்: செல்போனை அணைத்து வையுங்கள்
Published on

குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில் இன்று இரவு ஏழரை மணியிலிருந்து எட்டரை மணி வரை பெற்றோர் தங்கள் செல்போன்களை அணைத்து வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

குழந்தைகள் பெற்றோர் இடையே ஒரு உறவுப்பாலத்தை அமைக்கும் பொருட்டு மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள் என்ற பெயரிலான பரப்புரையை PARENT CIRCLE அமைப்பு முன்னெடுத்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை ஏற்கனவே அனுப்பியது. PARENT CIRCLE அமைப்பின் முன்னெடுப்பின் படி இன்றைய தினம் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை செல்ஃபோனை அனைத்து வைத்துவிட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் செலவளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னர் வாரத்திற்கு ஒருமுறை, நாள் ஒன்றிற்கு ஒரு முறை என கைபேசி போன்ற பொருள்களை ஒதுக்கி வைத்து குழந்தைகளோடு செலவிலும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com