சென்னை | அரிய வகை நோயினால் தாக்கப்பட்ட சிறுவன்.. அரசு மருத்துவமனையில் தரப்பட்ட உயர்தர சிகிச்சை!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த அயனாவரத்தை சேர்ந்த தேவராஜ் - ரோஸ்லின் தம்பதியரின் 2வது குழந்தை பத்து வயது சிறுவன் பால்ராஜ். இவர் ஒரு அரியவகையான நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காப்பீடு திட்ட அட்டை
காப்பீடு திட்ட அட்டைகூகுள்

சென்னை சிறுவனுக்கு அரிய நோய் பாதிப்பு!

சென்னை அயனாவரத்தை சேர்ந்த தேவராஜ் - ரோஸ்லின் தம்பதியரின் 2வது குழந்தை பால்ராஜ் (10). இவர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நோயின்படி, ஒவ்வொரு கைகளிலும் மாறுபட்ட வகையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதும், கால்களில் மாறுபட்ட நாடித் துடிப்பு ஏற்படுவதும் அவருக்கு இருந்துள்ளது.

எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் Right Hilar Node என்ற பிரச்னை அவருக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. CT CHEST எடுத்து பார்த்ததில் Coronary And Abdominal aorta Calcification என்ற அந்த நோய் அவருக்கு இருப்பது தெரியவந்தது. மேலும் சிறுவனுக்கு வலிப்பு நோய் இருப்பதும் கண்டறியப்பட்டு உடனடியாக அதற்கு தேவையான சிகிச்சையும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கைகளிலும் மாறுபட்ட வகையில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதும், கால்களில் மாறுபட்ட நாடித் துடிப்பு ஏற்படுவதும் அவருக்கு இருந்துள்ளது.

சோதனையில் தெரிய வந்தது என்ன?

CT Abdominal Angio செய்ததில் சிறுநீரகத்திற்கு செல்லும் இரு புற ரத்த குழாய்களிலும் அடைப்பு இருப்பது தெரியவந்தது. உடனே DMSA எனும் உயர் சிறப்பு பரிசோதனையும் செய்யப்பட்டதில் சிறுநீரகத்தில் இருபுறமும் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி!

இதுபோன்ற தொடர் பிரச்னைகளால், மேலும் உயர்தர சிகிச்சைக்காக சிறுவன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜனின் மேற்பார்வையில் Interventional Radiology பிரிவின் தலைமை மருத்துவர் மற்றும் துறையின் குழுவினர் உடன் மயக்கவியல் துறை வல்லநர்கள் சேர்ந்து மேற்கொண்ட Ballon Dilatation என்ற சிகிச்சையை சிறுவனுக்கு செய்துள்ளனர். இதன்படி சிறுவனின் வலது சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த அடைப்பு நீக்கி சரி செய்யப்பட்டது.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை!

அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த உயர் சிறப்பு சிகிச்சைகள் அனைத்தும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் வழங்கப்பட்டது என்று மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியுள்ளார். இதையடுத்து மாணவரின் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் எ.தேரணிராஜன் கூறுகையில், “சிறு வயதில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவது அரிதினும் அரிது. அதனால் அவரது உடலில் உள்ள அனைத்து ரத்த நாளங்களையும் ஆய்வு செய் வதற்கான எம்ஆர்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவருக்கு அரிய வகை தன்னுடல் தாக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதை சீராக்குவதற்காக ரத்த நாளங் களில் 'பலூன் டைலேசன்' எனப்படும் இடையீட்டு சிகிச்சை மூலம் அப்பிரச்னை சரி செய்யப்பட்டது. தற்போது, அந்த சிறுவனின் ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. தன்னுடல் தாக்கு நோய்க்கான சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப் பட்டு வருகின்றன” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com