\
வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தை - உரிய நேரத்தில் உதவிய திருவாரூர் காவலர்கள்

வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தை - உரிய நேரத்தில் உதவிய திருவாரூர் காவலர்கள்

வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய குழந்தை - உரிய நேரத்தில் உதவிய திருவாரூர் காவலர்கள்
Published on

திருவாரூரில் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை ரோந்து சென்ற காவலர்கள் உரிய நேரத்தில் காப்பாற்றியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் நெடுஞ்சாலையில் காவலர்கள் ரோந்து சென்றபோது, பெற்றோர் தூக்கிச் சென்ற ஒன்றரை வயது குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

செய்வதறியாமல் பெற்றோர் பதைபதைக்க, அதனை கண்ட காவலர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், புகழேந்தி, திருநாவுக்கரசு ஆகியோர் குழந்தையை காவல் வாகனத்தில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உரிய நேரத்தில் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்ததால் குழந்தையின் உயிர் காப்பற்றப்பட்டது. இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரோந்து காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com