கடலூரில் திருடப்பட்ட குழந்தை மூன்றே மணி நேரத்தில் புதுச்சேரியில் மீட்பு

கடலூரில் திருடப்பட்ட குழந்தை மூன்றே மணி நேரத்தில் புதுச்சேரியில் மீட்பு

கடலூரில் திருடப்பட்ட குழந்தை மூன்றே மணி நேரத்தில் புதுச்சேரியில் மீட்பு
Published on

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றே மணி நேரத்தில் புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் போலீசார் மீட்டனர்.

பண்ருட்டி விசூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது, அந்த குழந்தை இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் உள்ளது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பெண் ஒருவர் அந்த குழந்தையை எடுத்து செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் ஆகியயோரிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் குழந்தையுடன் புதுச்சேரி பேருந்தில் ஏறி சென்றதை உறுதிப்படுத்தினர். அதனையடுத்து புதுச்சேரி போலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி போலிசார் உதவியுடன் குழந்தையை கடத்திய பெண் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பதாக கிடைத்தது. அந்த தகவலை அடுத்து அங்கு சென்று சோதனை செய்த கடலூர் போலிசார் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் அந்த பெண்ணை கடத்தப்பட்ட குழந்தையுடன் கையும் களவுமாக பிடித்தனர். குழந்தையை மீட்டு அந்த பெண்ணை கைது செய்து கடலூர் அழைத்து சென்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுச்சேரி பன்னித்திட்டு பகுதியை சேர்ந்த லாவண்யா என்பது தெரியவந்தது. அந்தப் பெண் எதற்காக கடத்தினார் என்பது குறித்தும் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/bo7Re1tI3dk" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

கடலூரில் திருடப்பட்ட குழந்தை மூன்றே மணி நேரத்தில் இருமாநில போலீசாரும் சேர்ந்து மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com