சுஜித் விழுந்தது முதல், சடலமாக மீண்டது வரை, நடந்தது இதுதான்!

சுஜித் விழுந்தது முதல், சடலமாக மீண்டது வரை, நடந்தது இதுதான்!
சுஜித் விழுந்தது முதல், சடலமாக மீண்டது வரை, நடந்தது இதுதான்!

அக். 25: மாலை 5.40 மணிக்கு சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான்.

அக். 25: முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கினான் சுஜித்

அக். 25: மாலை 5.55க்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு ஆக்சிஜன் தரப்பட்டது.

அக். 25: மாலை 6.15 - தீயணைப்புத் துறை, வருவாய் துறை மீட்புப் பணியைத் தொடங்கினர்

அக். 25: மாலை 6.30 - மருத்துவக் குழு சம்பவ இடத்தில் முகாமிட்டது

அக். 25: மாலை 6.45 - மாவட்ட ஆட்சியர் சிவராசு‌ சம்பவ இடத்துக்கு வந்தார்

அக். 25: இரவு 7.15 - அமைச்சர்கள் வெல்லமண்டி‌ நடராஜன், வளர்மதி வந்தனர்

அக். 25: இரவு 8.00 - அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்

அக். 25: இரவு 7.30 - டேனியல் குழு மீட்புப் பணியில் முயற்சி

அக். 25: இரவு 8.00 - மதுரை மணி‌கண்டன் குழு‌ மீட்புப் பணியில் ஈடுபட்டது

அக். 25: இரவு 8.30 - பிரத்யேகக் கருவி மூலம் குழந்தையின் ஒரு கையில் சுருக்கு போடப்பட்டது

அக். 25: இரவு 10 மணி சிறுவனின் மறுகையில் சுருக்குப்போட 3 மணி நேரம் போராட்டம்.

அக். 25: இரவு 10.30 - ஸ்ரீதர் தலைமையில் 3ஆவது குழு கோவையில் இருந்து வந்தது

அக். 26: நள்ளிரவு 12.30 - குழந்தையின் கையில் ஏற்கனவே போடப்பட்ட சுருக்கு அவிழ்ந்தது

அக். 26: நள்ளிரவு 12.30 - குழந்தை 60 அடி ஆழத்திற்குச் சென்றது

அக். 26: அதிகாலை 1.30 - வெங்கடேஷ் தலைமையிலான குழு மீட்புப் பணி

அக். 26: அதிகாலை 2.30 - பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்

அக். 26: அதிகாலை 5 - புதுக்கோட்டை வீரமணி தலைமையிலான குழு வந்தது

அக். 26: காலை 8.30 - ஆழ்துளைக் கிணற்றில் இருந்த மண் சரிவை அப்புறப்படுத்தும் பணி

அக். 26: காலை 10.00- குழந்தையின் மீது இருந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி

அக். 26: காலை 11.00 - சென்னையில் இருந்து 18 பேர் கொண்ட மீட்புக் குழு வந்தது

அக். 26: காலை 11.30 - நடுக்காட்டுப்பட்டியில் சாரல்

அக். 26: காலை 11.40 - மழை நீர் ஆழ்துளைக் கிணற்றுக்குள் செல்லாத வகையில் தார்ப்பாய் கட்டப்பட்டது

அக். 26: காலை 11.45 - வேலூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை

அக். 26: மதியம் 2 மணி - என்.எல்.சி, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட குழுக்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாம்

அக். 26: மாலை 3.40 - 70அடியிலிருந்து 80அடிக்கு நழுவியது குழந்தை

அக். 26: மாலை 4 - ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையை வெளியே தூக்க முயற்சி

அக். 26: மாலை 5 - 80 அடியிலிருந்து 85அடிக்கு நழுவியது குழந்தை

அக். 26: மாலை 5.10 - ஆழ்துளை கிணறுக்கு அருகே குழி தோண்டி குழந்தையை மீட்க முடிவு

அக். 26: மாலை 5.30 - குழந்தையை மீட்பதற்காக லால்குடியிலிருந்து ரிக் இயந்திரம் புறப்பட்டது

அக். 26: இரவு 7 - 85 அடியிலிருந்து 100 அடிக்கு குழந்தை சுஜித் நழுவிச்சென்றது

அக். 26: இரவு 9.30 - குழந்தை மேலும் கீழே செல்லாதிருக்க அதன் கை ஏர் லாக் முறையில் இறுகப்பிடிக்கப்பட்டது

அக். 27: அதிகாலை 2.15 - ரிக் இயந்திரம் நடுக்காட்டுப்பட்டி வந்தடைந்தது

அக்.27: ரிக் இயந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன

அக்.27: காலை 6 மணிக்கு குழி தோண்ட வேண்டிய இடம் வட்டமிடப்பட்டது

அக்.27 காலை 6.15: 3 மீட்டருக்கு பதிலாக 2 மீட்டர் தொலைவில் குழி தோண்ட முடிவு

அக்.27 காலை 7.08 - ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடக்கம்

அக்.27 நண்பகல் 12.30 முதல் ஐந்தரை மணி நேரத்தில் சுமார் 20 அடிக்கே குழித் தோண்டப்பட்டது

அக்.27 நண்பகல் 12.40 - முதல் ரிக் இயந்திரத்தை விட அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டுவர ஏற்பாடு

அக்.27 காலை - குழந்தையை மீட்க தோண்டப்பட்ட குழிக்குள் மண் சரியாமல் இருக்க இரும்பு குழாய்கள் பொருத்தம்

அக்.27 பிற்பகல் 3.35 - ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடக்கும்போதே மழை பெய்தது

அக்.27 பிற்பகல் 4.40 - பாறையை எளிதில் துளையிடும் அதிக திறன் கொண்ட இயந்திரம் வந்து சேர்ந்தது

அக். 27 மாலை 5.40 - குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து 48 மணி நேரம் கடந்தது

அக். 27 மாலை 6.30 - மழை வலுத்ததால், ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் செல்லாமல் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன

அக். 27 மாலை 7.20 - நடுக்காட்டுப்பட்டி வானிலையை கண்காணித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அக். 27 இரவு 9.45 - ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது, உடனடியாக சரிசெய்யப்பட்டது

அக். 27 இரவு 11.30 - சம்பவ இடத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை

அக். 28 நள்ளிரவு 12.00 - சக்திவாய்ந்த் 2-வது ரிக் இயந்திரத்தின் முதல்கட்ட பணி தொடக்கம்

அக். 28 12.15 - சுஜித்தின் பெற்றோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்

அக். 28 1 மணி - சுஜித்தை உயிருடன் மீட்க நடவடிக்கை: ஓ.பி.எஸ். பேட்டி

அக். 28 1 மணி - 2-வது இயந்திரத்தின் ட்ரில் பிட் மாற்றப்பட்டு பணி தொடக்கம்

அக். 28 3 மணி - 4 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

அக். 28 4 மணி - கடினமான பாறை காரணமாக 5 அடி மட்டுமே தோண்டிய புதிய இயந்திரம்

அக்.28 காலை 7.10 - ரிக் இயந்திரங்கள் மூலம் ‌கடந்த 24 மணி 40அடி ஆழம் தோண்டப்பட்டது

அக்.28 காலை 8.45 - சென்னையில் இருந்து 'ஆகாஷ்' என்ற ட்ரில் பிட் கொண்டுவர திட்டமிடப்பட்டது

அக்.28 காலை 9.30- மீட்பு பணியில் இறுதி முடிவு எடுக்கும் நிலையில் உள்ளோம்: விஜயபாஸ்கர் பேட்டி

அக்.28 காலை 10.30- மணிக்கு, 500 செ.மீ. ஆழம் தோண்டப்படுகிறது; மீட்புப்பணி கைவிடப்படாது: ராதாகிருஷ்ணன் தகவல்

அக்.28 காலை 11.40- 2ஆவது ரிக் இயந்திரம் பழுதானது; பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்

அக்.28 நண்பகல் 12.00- 45அடிக்கு ‌பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்

அக்.28 நண்பகல் 12.35 - பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் தீயணைப்பு படை வீரர் இறங்கினார்

அக்.28 நண்பகல் 12.55- 1,200 குதிரை திறன் கொண்ட போர்வேல் மூலம் துளையிடும் பணி தொடக்கம்

அக். 28. மாலை 4. 40 - போர்வெல் துளைகள் 20 அடியை எட்டிய நிலையில், ரிக் இயந்திரம் பணியை தொடர்ந்தது

அக். 28. மாலை 5. 16 - ரிக் இயந்திரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

அக். 28 மாலை 5. 20 - மீட்புப்பணிகள் பற்றி பிரதமரிடம் விளக்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவு

அக். 28 மாலை 5. 30 - மீட்புப்பணிகள் நடக்கும் இடத்தில் கனமழை பெய்தது

அக். 28 - மாலை 5. 35 - குழியில் 60 அடிக்கு கீழ் பாறை முடிந்து மண் இருப்பது தெரியவந்தது

அக். 28 மாலை 7.20 - ரிக் இயந்திரம் மூலம் 63 அடி வரை குழி தோண்டப்பட்டது

அக். 28 மாலை 7.40 - 65 அடி வரை குழி தோண்டப்பட்டதென வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

அக். 28 இரவு 8.54 - அனைத்து துறைகளும் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

அக். 28 இரவு 9.00 - ரிக் இயந்திரத்தால் தோண்டப்பட்ட குழியில் மீண்டும் போர்வெல் இயந்திரத்தால் தோண்டும் பணி தொடக்கம்

அக். 28 இரவு 9.45 தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் அஜித் குமார் ஏணி மூலம் இறங்கினார்

அக். 28 இரவு 9.55 குழிக்குள் இறங்கிய அஜித்குமார் வெளியே வந்து சேர்ந்தார்

அக். 28 இரவு 9.58 அஜித்குமாரால் குழிக்குள் இருந்து பெல்ட்டில் இணைக்கப்பட்ட பாறை வெளியேற்றப்பட்டது

அக்.29 அதிகாலை 2.30 - குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com