குழந்தை சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது: ரஜினிகாந்த்

குழந்தை சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது: ரஜினிகாந்த்

குழந்தை சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது: ரஜினிகாந்த்
Published on

குழந்தை சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. சுஜித், உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைக்குப் பின், சுஜித்தின் உடல் நடுக்காட்டுப்பட்டி, பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்ப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு பொதுமக்கள், அரசியல், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்தும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளப் பதிவில் ’சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com