கொலையில் என் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம்: ரித்தீஷ் தந்தை பேட்டி

கொலையில் என் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம்: ரித்தீஷ் தந்தை பேட்டி

கொலையில் என் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம்: ரித்தீஷ் தந்தை பேட்டி
Published on

எனது மகன் கொலையில் என் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம். எப்படி இருந்தாலும் என் மகன் கொலையில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்கள்  அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என கொலை செய்யப்பட்ட 4-ம் வகுப்பு மாணவரின் தந்தை கூறியுள்ளார்.

சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திகேயன்(38). இவரது மனைவி மஞ்சுளா(34). அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுகளது மகன் ரித்தீஷ் சாய்(10). நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவிற்கும் சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை அறிந்த மஞ்சுளாவின் கணவர் பலமுறை அவரை எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று டியூசன் சென்ற சிறுவன் ரித்திஷ் வீடு திரும்பவில்லை. பின்னர் கார்த்திகேயன் டீயூசனில் சென்று விசாரித்த போது நாகராஜ் என்ற நபர் பிள்ளையை அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

இதனை அறிந்த கார்த்திகேயன் உடனே நாகராஜை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 இது தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் சிறுவன் கொலை தொடர்பாக நாகராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மஞ்சுளாவுக்கும் தனக்கும் இருந்த உறவிற்கு மகன் ரித்தீஷ் இடையூறாக இருந்ததாகவும், அதனால் சிறுவனை கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் நாகராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை கார்த்திகேயன், “ சொத்து எல்லாவற்றையும் என் மனைவி பெயரில் எழுதி வைத்துவிட்டேன். ஒரே ஒரு மகன்தான். அவனை தூக்கிவிட்டால் சொத்து எல்லாம் அவர்களுக்குத்தான் என நினைத்திருக்கலாம். என் மகன் கொலை தொடர்பாக யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இன்னும் நாகராஜோடு என் மனைவிக்கு தொடர்பு இருக்கிறது. மொபைல் ரெக்கார்டிங்கை ட்ரேஸ் செய்தால் எல்லாம் தெரியவரும்” என்றார்.

உங்கள் மனைவிக்கும் கொலையில் தொடர்பிருக்குமா எனக்கேட்டபோது, “நாகராஜ் டியூசன் சென்று தூக்கும் அளவிற்கு பெரிய ஆள் கிடையாது. 28 வயது தான் ஆகிறது அவனுக்கு. எனவே மனைவிக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com