ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது

ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது

ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது
Published on

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த, திருச்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சியில் போலி பெயரில் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசாரின் தீவிர நடவடிக்கையால் திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘நிலவன் ஆதவன்’ என்ற போலி கணக்கின் மூலம் ஃபேஸ்புக்கில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.  இதையடுத்து இவரை போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com