7 மாதங்களில் 121 குழந்தைத் திருமணங்கள் - என்ன நடக்குது தேனியில்..?

தேனி மாவட்டத்தில் ஏழு மாதங்களில் 121 குழந்தைத் திருமணங்கள் நடந்திருப்பதாக வெளியாகி உள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தேனி மாவட்டத்தில் 2022ஆம் ஆண்டு 199 குழந்தை திருமணங்கள் நடத்த முயற்சிகள் நடந்தன. அவற்றில் 185 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 14 திருமணங்கள் நடந்தேறின. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில் தேனி மாவட்டத்தில் 121 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அவற்றில் 101 திருமணங்கள் தடுக்கப்பட்டாலும் 20 திருமணங்கள் நடந்து முடிந்தன.

தேனி
தேனி

தேனி மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான ஏழு மாதங்களில் 5,102 குழந்தைகள் பிறந்ததில் 473 குழந்தைகள் இரண்டரை கிலோவிற்கும் கீழே எடை குறைந்த குழந்தைகள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்யும் சம்பவங்களாலும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதியும் குழந்தைத் திருமணங்களை நடத்துவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைத் திருமணங்கள்
“குழந்தை திருமணங்களை விட சிறார்கள் காதலித்து தாங்களாக செய்து கொள்வது அதிகம்” - அமைச்சர் கீதா ஜீவன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com