\
பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் ? - மணமகன் உள்ளிட்ட 4 பேர் கைது

பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் ? - மணமகன் உள்ளிட்ட 4 பேர் கைது

பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் ? - மணமகன் உள்ளிட்ட 4 பேர் கைது
Published on

தருமபுரி அருகே 14 வயது பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமியை பாலக்கோடு அடுத்த கென்டிக்கானஹள்ளியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பெரியசாமிக்கு திருமணம் செய்துவைக்க, அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, பெரியசாமியின் தாய் லட்சுமி, அவரது உறவினர்கள் மாதேஷ், மாது ஆகியோர் சேர்ந்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பள்ளம் பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் பெரியசாமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சிறுமியை பெரியசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார். அதில் தனது 14 வயது சிறுமியான தனது மகளுக்கு, குழந்தை திருமணம் செய்து வைத்ததுடன், பாலியல் வன்கொடுமையும் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

புகாரில் பெரியசாமி, அவரது தாய் லட்சுமி, உறவினர்கள் மாதேஷ், மாது ஆகியோர் மீது குற்றச்சாட்டினை வைத்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமி, லட்சுமி மற்றும் உறவினர்கள் மாதேஷ், மாது ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் குழந்தை திருமணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com