திருச்சி: மாநகராட்சி பணியில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

திருச்சி: மாநகராட்சி பணியில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

திருச்சி: மாநகராட்சி பணியில் ஈடுபடும் குழந்தை தொழிலாளர்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்?

திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை மாநகராட்சி மீட்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாளசாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட அரபி குல தெருவில் குடிநீர் இணைப்புக்காக குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்கள் மூலம் நடைபெறும் இப்பணி பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.

இப்பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது. குழி வெட்டுவது, சாலை வெட்டுவது உள்ளிட்ட பணிகளை சிறுவர்கள் செய்கின்றனர். மேலும் அதி பளு கொண்ட சுத்தியல்களை கொண்டு சாலை உடைக்கும் கடினமான பணிகளிலும் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அப்பணிகளை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது களத்தில் இருந்த கண்காணிப்பாளரிடம் நம் செய்தியாளர் கேட்ட பொழுது அச்சிறுவர்கள் ஆந்திர மாநிலத்தவர்கள் எனக்கூறி, மேற்கொண்டு எந்த தகவலும் தராமல் contract Manager தொடர்பு எண்ணை கொடுத்துவிட்டார். தொடர்ந்து நாம் ஒப்பந்த மேலாளரிடம் கேட்ட பொழுது, குழந்தைகள் பெற்றோர்கள் உடன் வந்ததாகவும் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார்.

இது போன்ற குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிந்து நடைபெறுகிறதா அல்லது ஒப்பந்ததாரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பிருந்தா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com