\
கஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது 

கஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது 

கஞ்சா போதையில் பள்ளிக்குழந்தைகளை கடத்திய நபர் கைது 
Published on

சென்னை அருகே கஞ்சா போதையில், பள்ளிக் குழந்தைகளை கடத்திச் சென்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஏரிமேட்டைச் சேர்ந்த வீரன் என்பவரின் பிள்ளைகளான தனுஸ்ரீ, அருண் ஆகியோர், நேற்று வழக்கம்போல அனுப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், பள்ளியில் இறக்கி விடுவதாக கூறி லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால், இருசக்கர வாகனம் பள்ளியையும் தாண்டி சென்றதைக் கண்ட சக மாணவர்கள் ஆசிரியரிடம் கூறியுள்ளனர். 

உடனடியாக மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதோடு, கிராம‌ மக்களும் தேடினர். 3 மணி நேரத்துக்கு பிறகு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கண்ட கிராம மக்கள், குழந்தைகளை மீட்டனர். கஞ்சா போதையில் இருந்த இளைஞரை பிடித்து மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேசவபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்று தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com