\
ஹாசினி கொலை வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு

ஹாசினி கொலை வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு

ஹாசினி கொலை வழக்கில் 19ம் தேதி தீர்ப்பு
Published on

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-‌ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ‌செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹாசினி எனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, பின்னர் மும்பையில் அவரை கைது செய்‌தது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதால் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com