\
சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Published on

கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மோத்தேபாளையம் ஏ.டி.காலனியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர், வாழைத் தோட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

தினேஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய நீதிபதி போக்ஸோ பிரிவிற்கு ஓர் ஆயுள், கொலை பிரிவிற்கு ஓர் ஆயுள் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். தடயங்களை மறைத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு பிரிவுக்கு ஆயிரம் ரூபாய் என 3 பிரிவிற்கு மூன்று ஆயிரம் ரூபய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தினேஷ்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com