கழிவுநீர் தொட்டிக்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது.
பண்டரகோட்டையைச் சேர்ந்த மகாராஜன் - பிரியா தம்பதியின் 3 வயது மகள் பவழவேணி. பிரியாவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் மருத்துமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது குழந்தை பவழவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் தவறி விழுந்துள்ளது.
இதனை யாரும் கவனிக்காத நிலையில், மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் குழந்தை நீண்ட நேரம் இருந்துள்ளது. தாய் பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது குழந்தை குழியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.