\
சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மருத்துவமனைக்கு சீல்

சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மருத்துவமனைக்கு சீல்

சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மருத்துவமனைக்கு சீல்
Published on: 

சட்டவிரோதமாக சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் இயங்கி வரும் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வந்த சுதா மருத்துவமனைக்கும் சேலம் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் நெடுமாறன் சீல் வைத்தார்.

சட்டவிரோத கருமுட்டை விற்பனை தொடர்பாக ஏற்கெனவே சேலம் சுதா மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு ஸ்கேன் மையத்திற்கு மட்டும் கடந்த மாதம் அதிகாரிகள் சீல் வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு சீல் வைப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையின் அனைத்து அறைகளின் சாவியும் முறையாக ஒப்படைக்கப்பட்ட பின்னர் சீல் வைக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com