திருமணமான 3 மாதத்தில் பிறந்த குழந்தை மர்ம மரணம்
அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்து 3 நாளில் இறந்ததால் மருத்துவர்கள் புகாரின் பேரில் போலீசார்
தாய், தந்தையிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளாலவயல் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மனைவி சரண்யா.
இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆன நிலையில் கடந்த 28-ம் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்
பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென இறந்துள்ளது.
ஆரோக்கியமாக இருந்த குழந்தை திடீரென இறந்ததால் குழந்தையின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு மருத்துவர்கள் போலீசாருக்கு
தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆய்வாளர் பாலமுருகன், குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரித்து
வருகின்றார். போலீசாரிடம் சரண்யாவின் கணவர் கார்மேகம் திருமணத்திற்கு முன்பிருந்தே நிச்சயமானதில் இருந்து
சரண்யாவுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இருந்தபோதும் குழந்தையின் மர்ம சாவு அனைவரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.