பலரின் பிரார்த்தனையால் நலம் பெற்றார் தன்யஸ்ரீ..!
குடிபோதையால் மாடியில் இருந்து விழுந்த நபரால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தை தன்யஸ்ரீ சிகிச்சை முடிந்து நலம்
பெற்றுள்ளார்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் தனது பேத்தி தன்யஸ்ரீயை (வயது 4) அழைத்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டருகே இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றார். அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி தன்யஸ்ரீயின் மீது விழுந்தார். இதில் குழந்தை தன்யஸ்ரீவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த சிறுமி தன்யஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமி தன்யஸ்ரீயின் முதுகு தண்டுவடம், காலில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தன்யஸ்ரீயின் நிலைமை குறித்து அறிந்த நல்ல உள்ளம் கொண்ட ஏராளமான மக்கள் அவரின் தந்தையைச் சந்தித்து சிகிச்சைக்காக பணஉதவி செய்தனர். இந்நிலையில் சிறுமி தன்யஸ்ரீ சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளார். பலரின் பிரார்த்தனை வீண் போகாமல் தற்போது சிறுமி நலமுடன் உள்ளார் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.