சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : முன்னாள் ராணுவ வீரர் மீது குண்டாஸ்
சென்னை அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த ஆவடி அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் சமீபத்தில் அரங்கேறியது. இந்த சம்பவம் அனைவரது நெஞ்சையும் பதற வைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மீனாட்சி சுந்தரம் என்ற முன்னாள் ராணுவ வீரரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, மீனாட்சி சுந்தரமும், கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை மறைக்க உதவியதாக அவரின் மனைவி ராஜம்மாளை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் குண்டர் சட்டத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.