காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்

காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்

காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்
Published on

திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ரமணா நகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அருணை குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். காப்பகத்தின் உரிமையாளராக திருவண்ணாமலையைச் சேர்ந்த பாபு என்பவரும், வினோத்குமார் என்பவர் மேலாளராகவும் உள்ளனர். இந்த காப்பகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உரிய பாதுகாப்பு ஏதுமில்லை என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது காப்பகத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும், மேலும் மாணவிகள் சிலருக்கு உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 15 மாணவிகளை மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காப்பகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள், கணினியின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததார். 

அத்துடன் காப்பக உரிமையாளர் பாபு மற்றும் மேலாளர் வினோத்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காப்பகத்தில் பணிபுரிந்த காவலாளி மண்ணாங்கட்டி, பெண் சமையலர் சுசீலா மற்றும் காப்பக மேலாளரின் மனைவி ராஜலட்சுமி ஆகியோரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com