\
"தலைமை செயலக ஐ.டி. ரெய்டில் சதி நடந்திருக்கிறது" - ராமமோகன் ராவ்

"தலைமை செயலக ஐ.டி. ரெய்டில் சதி நடந்திருக்கிறது" - ராமமோகன் ராவ்

"தலைமை செயலக ஐ.டி. ரெய்டில் சதி நடந்திருக்கிறது" - ராமமோகன் ராவ்
Published on

தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் தவறான நடவடிக்கை. யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. தேவையில்லாமல் என் மீது ஒரு பெரிய பழியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். யார் செய்தார்கள் என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் சுத்தமானவன்.

ஜெயலலிதாவின் இறப்புக்கு பிறகு ஏதோ நடந்திருக்கிறது. என்ன நடந்தது யார் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் யாரையும் பழி சுமத்த விரும்பவில்லை. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கிறது. இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது நான் சொல்வேன்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com