ஜூன் 14 முதல் 50% பணியாளர்களுடன் உயர்நீதிமன்றங்கள் செயல்படும் - தலைமை பதிவாளர்

ஜூன் 14 முதல் 50% பணியாளர்களுடன் உயர்நீதிமன்றங்கள் செயல்படும் - தலைமை பதிவாளர்
ஜூன் 14 முதல் 50% பணியாளர்களுடன் உயர்நீதிமன்றங்கள் செயல்படும் -  தலைமை பதிவாளர்

ஜூன் 14 ஆம் தேதி  திங்கட்கிழமை முதல் 50% பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்படும் என தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொற்று குறைந்துவரும் மாவட்டங்களில் ஜூன் 14ஆம் தேதிவரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்குபிறகு தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துவரும் நிலையில், இன்று முதல்வர் நடத்திய ஆலோசனையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாம் என உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, என்னென்ன தளர்வுகள் என்பது குறித்த விவரங்களை முதல்வர் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள் முதல் 50% பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்படும் என தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்திருக்கிறார். இதற்கென சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரைக்கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற ஊழியர்களை சுழற்சிமுறையில் பிரித்து பணிக்குவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com