தமிழ்நாடு
பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்
பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.
அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். கோவிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர், ஏழை பெண்களுக்கு சேலைகளை வழங்கினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொது விருந்தில் கலந்துகொண்ட முதல்வர், பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.