டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில், 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி செல்கிறார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய் பகுதிக்குச் சென்று, தூர்வரும் பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை மாவட்டத்தில் முதலைமுத்துவாரி கொடிங்கால் வாய்க்கால் மற்றும் வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளையும் பார்வையிடுகிறார்.

மாலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் முதலமைச்சர், அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com