“உங்கள் கனவுகள் நிறைவேறும் காலம்!”- கலைஞரின் நினைவுநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி வீடியோ!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாவின் மறைவுக்கு பின் திமுக-வின் தலைவராகி 1950 ல் இருந்தே தமிழக அரசியல் வரலாற்றின் அனைத்து பக்கங்களிலும் தனது கால்பதித்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் சிற்பி என்று அழைக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் 5 வது நினைவு தினம் இன்று.

இத்தினத்தில், கலைஞரின் மகனும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மூத்த பிள்ளை முரசொலி வாயிலாகத் தலைவர் கலைஞருக்கு உறுதியளித்திருக்கிறேன். இது, உங்கள் கனவுகள் நிறைவேறும் காலம்!” என்று கூறியுள்ளார் முதலவர் ஸ்டாலின்.

அந்த வீடியோவில், “உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் தலைவரே! 95 வயது வரை நாளெல்லாம் உழைத்தீர்கள். உங்கள் உழைப்பின் உருவக வடிவம்தான் இந்த நவீன தமிழ்நாடு.

கலைஞர் கருணாநிதி  நினைவு தினம் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கலைஞர் கருணாநிதி நினைவு தினம் - முதல்வர் ஸ்டாலின் கடிதம்

‘ஸ்டாலின் என்றால் உழைப்பு’ என்றீர்கள். அந்த கரகர குரல்தான் கண்டிப்பு குரலாக என்னை இன்று உழைக்க வைத்து கொண்டிருக்கின்றது. உங்கள் நூற்றாண்டு உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரும் ஆண்டு” என்று பேசியுள்ளார்.

-Jenetta Roseline S

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com