தவெக தலைவர் விஜய் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
தவெக தலைவர் விஜய் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்web

விஜய் குறித்த கேள்வி.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை!

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Published on
Summary

2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி இங்கிலாந்த் பயணம் மேற்கொள்வதாகவும், செப் 8-ம் தேதி சென்னை திரும்புவதாக கூறினார்.

மேலும், 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் பெற்றுள்ளதாக கூறிய அவர், இதுவரை 922 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திப்பட்டுள்ளதாகவும், 32 லட்சத்து 31 ஆயிரத்து 32 பேருக்கு இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

mk stalin
mk stalin

அதேபோல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க பயணங்கள் மேற்கொண்டதாக கூறிய முதலமைச்சர், அமெரிக்க பயணத்தின் போது 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஸ்பெயின் பயணத்தின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஜப்பான் பயணத்தின் போது மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஐக்கிய அரபு அமீரகம் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிங்கப்பூர் பயணத்தின் போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம் வெளிநாடு பயணங்களின் போது 36 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 18,498 கோடி மதிப்பில் தமிழகம் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறினார்.

அதுமட்டுமில்லாமல் 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளதாக கூறிய அவர், சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியும் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
"தூக்கிவீசப்பட்டது நான்தான்; கட்சிக்கு கெட்டப்பெயர் வரக்கூடாதுனு..” - பவுன்சர்கள் மீது இளைஞர் புகார்

விஜய் குறித்த கேள்விக்கு முதல்வர் கொடுத்த பதில்..

வெளிநாட்டு பயணங்களால் உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு பலன் உண்டா என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரை இ.பி.எஸ் விமர்சித்து வருகிறார். அவர் சென்றபோது இருந்த சுற்றுப்பயணம் போல இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கிறார், ஆனால் நான் கையெழுத்து போட்ட அனைத்தும் நடைமுறைக்கு வந்துள்ளது, வரவும் இருக்கிறது என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கு, திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருக்கு, புதிய கட்சிகள் உள்ள வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருகின்றனர் என்றார்.

சமீபத்தில் பீஹாருக்கு போய் இருந்திங்க, அங்கு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தீங்க, தமிழகத்தில் அப்படி நடக்கும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, யார் என்ன சதிசெய்தாலும் அதை முறியடிக்கக்கூடிய வல்லமை தமிழகத்திற்கு உண்டு. பீஹாரில் கூட தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது, அங்கு மக்களை எழுச்சி பெறவைக்கும் வேலையை தான் அவர்கள் செய்துள்ளனர் எனறு கூறினார்.

சட்டமன்ற கருத்துக்கணிப்பு குறித்து பேசிய முதல்வர், எல்லா கருத்து கணிப்புகளையும் மிஞ்சி திமுகவின் வெற்றி இருக்கும் என்று கூறினார்.

முடிவாக தவெக தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து கூறுங்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்ன? என்ற கேள்வியை எழுப்பிய அவர், அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் பொதுவா அதிகம் பேசமாட்டேன், பேச்சை விட்டு செயலில் அனைத்தும் இருக்கும் என்று கூறினார்

தவெக தலைவர் விஜய் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
”வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்..” தவெக தலைவர் விஜயை ஒருமையில் பேசிய நடிகர் ரஞ்சித்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com