முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் முகநூல்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக அளித்தார் முதல்வர்!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார். இதனை காசோலையாக தலைமை செயலாளரிடம் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
Published on

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் மறுவாழ்வு சேவை ஊர்தியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார். இதன் பின்னர், காலநிலை தொடர்பான கூட்டமும் நடைப்பெற்றது.

இதற்கிடையே, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ’முதலமைச்சர் நிவாரண நிதிக்கு’ தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ஒருமாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார். இதனை காசோலையாக தலைமை செயலாளரிடம் முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
“தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்” - நடிகர் மன்சூர் அலிகான்

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகங்களும் கொடுத்து வருகின்றன. அதேபோல

இந்த சூழலில்தான், முதலமைச்சரும் தன் ஒரு மாத ஊதியத்தை வழங்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இவரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களும் நிதி உதவி செய்வர் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com