\
முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்PT WEB

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதியை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.
Published on

முன்னாள் மத்திய அமைச்சரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று வேலூரில் நடைபெறும் தேர்தல்  பரப்புரைக்கு சென்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவருடன் பேசிக்கொண்டிருந்த, முதல்வர் ஸ்டாலின், நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து தனியார் ஓட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் தனியார், மருத்துவமனைக்கு வருவதையொட்டி மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com