சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு

சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு
சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மனித குலத்தை அச்சுறுத்தும் கொடிய கொரோனா, விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. நீலா என்ற பெண் சிங்கம், கடந்த 3ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்றார். அங்கிருந்து அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், பின்னர் பேட்டரி காரில் சிங்கங்கள் உள்ள பகுதிக்குச் சென்றார்.

பூங்காவில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவிதா என்ற பெண், பேட்டரி காரை இயக்கினார். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சை முறைகள் குறித்து பராமரிப்பாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com