இறகுப்பந்து விளையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

இறகுப்பந்து விளையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

இறகுப்பந்து விளையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் இறகுப்பந்து விளையாட்டு கூடத்தை திறந்து வைத்த முதலைமச்சர் மு.க. ஸ்டாலின், தனது மகனும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுடன் சிறிது நேரம் விளையாடினார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் இறகுப்பந்து விளையாட்டுக் கூடம், பூங்காக்கள், மழைநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை கட்டப்பட்டது. இவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இரு குழுவினராக பிரிந்து சிறிது நேரம் விளையாடினர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com