“மக்கள் தான் உண்மையான மேலதிகாரிகள்” - UPSC தேர்வில் வென்றவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரை

இளம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் துடிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “உயர்ந்த பதவி என்பது அதைவிடப் பன்மடங்கு பொறுப்பையும் கடமையையும் உள்ளடக்கியது. மக்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்களிடம் கனிவாகப் பழகுங்கள், அவர்களின் தேவைகளை அறிந்துகொள்வதில்தான் இந்த நாட்டை நாம் புரிந்துகொள்வது அடங்கியிருக்கிறது.

குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்றிருக்கும் நீங்கள் இனிதான் சமூகத்தைக் கூர்ந்து படிக்க வேண்டும். கற்பதைத் தொடருங்கள்; தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தாருங்கள்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com