செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா? - முதல்வர் பதில்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா? - முதல்வர் பதில்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா? - முதல்வர் பதில்
Published on

மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் “செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி. தற்போது 21 அடி நீர் இருப்பு உள்ளது. 22 அடி வரும்போது அணையை திறக்க உத்தரவிட்டுள்ளேன். மழை இரண்டு நாட்களுக்குதான் இருக்கும் என கூறியுள்ளார்கள். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும். ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், போதிய மணல் மூட்டைகளை வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com