கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை : முதல்வர் பழனிசாமி

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை : முதல்வர் பழனிசாமி

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை : முதல்வர் பழனிசாமி
Published on

தமிழக அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com