\
அமராவதி அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

அமராவதி அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

அமராவதி அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு
Published on: 

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் ஜனவரி 3ஆம் தேதி நீர் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து நீர்த்திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரையிலான காலகட்டத்தில் தகுந்த இடைவெளிவிட்டு, நீர் இருப்பு மற்றும் வரத்தினை கருத்தில் கொண்டு நீர் திறக்க ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com